by Staff Writer 06-08-2019 | 5:06 PM
Colombo (News 1st) அரச நிறுவனங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நிதி கணக்காய்வு 90 வீதம் வரை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் W.B.C.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த கணக்காய்வு அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் நிறைவு செய்து வௌியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட நிதி கணக்காய்வுகளில் அரச நிறுவனங்கள் பலவற்றில் காணப்படுகின்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
நிலவும் குறைபாடுகள் மற்றும் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, தடயவியல் கணக்காய்விற்காக நாட்டின் கணக்காய்வு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்காக முதற்கட்டமாக அதிகாரிகள் 7 பேர் இங்கிலாந்தில் பயிற்சி பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் W.B.C.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும், 7 கணக்காய்வு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.