மூன்று ஆளுநர்கள்,02 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மூன்று ஆளுநர்கள்,02 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மூன்று ஆளுநர்கள்,02 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

05 Aug, 2019 | 4:44 pm

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

பெற்றோலிய வள இராஜாங்க அமைச்சராக அனோமா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கீர்த்தி தென்னகோன் மத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன் மைத்திரி குணரத்ன ஊவா மாகாண ஆளுநராகவும், ஹேமால் குணசேகர தென் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்