க.பொ.த உயர் தரப்பரீட்சை  இன்று ஆரம்பமாகியது

க.பொ.த உயர் தரப்பரீட்சை  இன்று ஆரம்பமாகியது

க.பொ.த உயர் தரப்பரீட்சை  இன்று ஆரம்பமாகியது

எழுத்தாளர் Staff Writer

05 Aug, 2019 | 4:48 pm

கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை  இன்று ஆரம்பமாகியது.

இந்த மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை உயர் தரப்பரீட்சையில் மூன்று இலட்சத்து 35 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர் தர பரீட்சை , இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 678 மத்திய நிலையங்களில் இடம்பெறுகின்றன.

பரீட்சைகள் 8.30 மணிக்கு ஆரம்பமாகும் பட்சத்தில் பரீட்சார்த்திகளை 8 மணிக்கு பரீட்சை நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது வாகன அனுமதிப் பத்திரத்தை தம்முடன் பரீட்சை நிலையத்திற்கு எடுத்து வருமாறும் கோரப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் பரீட்சை நிலையங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்