வௌிநாடு சென்று வருவோரால் மீண்டும் பரவும் மலேரியா

வௌிநாடு சென்று வருவோரால் மீண்டும் பரவும் மலேரியா

by Staff Writer 03-08-2019 | 3:55 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மலேரியா நோயாளர்கள் 18 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் தென் மாகாணத்தில் அடையாளங்காணப்பட்டதாக மலேரியா ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார். உகண்டாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரே மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஹேமந்த ஹேரத் கூறினார். மலேரியா தொற்றுக்குள்ளானோர் உடனடியாக சிகிச்சைகளைப் பெற்றால் நோயை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மலேரியா அற்ற நாடாக 2012 ஆம் ஆண்டு முதல் இலங்​கை பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், வௌிநாடுகளிலிருந்து வருகை தருவோரால் மீண்டும் மலேரியா நோய்த்தொற்று அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.