லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்கத் தடை

லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்கத் தடை

லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்கத் தடை

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2019 | 4:41 pm

Copa America எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினாவின் தேசிய கால்பந்து அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, “இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்க கால்பந்து கழகம் விதித்துள்ளது.

ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மெஸ்ஸி மீதான இந்த தடை நீக்கப்படாவிட்டால், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெறவுள்ள போட்டிகளை அவர் தவறவிடக்கூடும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்