கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
பயங்கரவாதத்தை தடுக்க முன்வராதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்: ஜனாதிபதி

பயங்கரவாதத்தை தடுக்க முன்வராதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்: ஜனாதிபதி

பயங்கரவாதத்தை தடுக்க முன்வராதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2019 | 3:20 pm

Colombo (News 1st) பயங்கரவாதத்தை தடுப்பதற்கு முன்வராதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு என்ற தொனிப்பொருளில் வடமேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தியதாகவும் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான சட்டமூலங்களை சமர்ப்பிக்காதவர்கள் மரண தண்டனைக்கு எதிராக கருத்துக்களை வௌியிடுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் ஆட்சியை தக்கவைப்பதற்கே உலக தலைவர்கள் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவற்றை அறிந்திருந்தும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தாம் முன்னின்று செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எவ்விதத் தடைகள் வந்தாலும் தமது செயற்பாடுகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்