சமூக வலைத்தளத்தினூடாக ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற முயன்றவருக்கு விளக்கமறியல்

சமூக வலைத்தளத்தினூடாக ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற முயன்றவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2019 | 8:13 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள ஒருவரை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான சேதுரூபன் என்பவரே நேற்று (02) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினை ஔிப்பதிவு செய்த நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளரின் கெமராவிற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பரராஜசேகரம் சுஜீபன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்