எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்

எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

by Staff Writer 02-08-2019 | 8:37 PM
Colombo (News 1st) துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையால், எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையினால், எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.