ஹம்பாந்தோட்டை மேயருக்கு 5 வருட சிறைத்தண்டனை

ஹம்பாந்தோட்டை மேயருக்கு 5 வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2019 | 3:38 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை நகர மேயர் விராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாகாண மேல் நீதிமன்றத்தில் இவர்களுக்கான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 3 பிரதிவாதிகளை மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்