மொனராகலை மாவட்டத்திற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது

மொனராகலை மாவட்டத்திற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது

மொனராகலை மாவட்டத்திற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2019 | 4:06 pm

Colombo (News 1st)  கும்புக்கன் ஓயாவில் எண்ணெய் மற்றும் கிறீஸ் உள்ளிட்ட கழிவுத்திரவங்கள் கலந்துள்ளதால், மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (03) வரை தடைப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் அல்பீசியா நீராவி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து இந்த கழிவுத்திரவங்கள் கும்புக்கன் ஓயாவில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொனராகலை நகரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மொனராகலை, பதுளை மற்றும் ஒக்கம்பிட்டிய பகுதிகளில் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரவீந்திர குமார தெரிவித்தார்.

அவர்களுக்கு பவுசர்களின் மூலம் நீரை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்