காணி வழங்குவதில் புறக்கணிப்பு: மன்னாரில் போராட்டம்

காணி வழங்குவதில் புறக்கணிக்கப்படுவதாக மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

by Staff Writer 01-08-2019 | 2:26 PM
Colombo (News 1st) மன்னார் நகரசபை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், சாரதிகள் உள்ளிட்ட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் இன்று (01) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னேடுத்துள்ளனர். காணி வழங்கும் திட்டத்தில் தாம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுவதாக சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்குக் காணி வழங்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 15 வருடங்கள் கடந்தபோதிலும் இதுவரை துப்புரவுப் பணியாளர்களுக்கு குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரமோ, வீட்டுத் திட்டமோ வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திக்க முற்படுகின்றபோதும், தாம் வௌியேற்றப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது நிலையைக் கவனத்தில் கொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.