ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

by Staff Writer 01-08-2019 | 7:27 AM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (01) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பிலான யோசனை இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக, கட்சியின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.