நபரொருவரைக் கடத்தி தடுத்துவைத்திருந்த மூவர் கைது

நபரொருவரைக் கடத்தி தடுத்துவைத்திருந்த மூவர் கைது

நபரொருவரைக் கடத்தி தடுத்துவைத்திருந்த மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2019 | 12:16 pm

Colombo (News 1st) நபரொருவரைக் கடத்திச் சென்று கட்டாயத்தின் பேரில் தடுத்துவைத்திருந்த மூவர், பண்டாரகம – கொஸ்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குறித்த நபர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரினால், அவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனின் சாரதியும் அடங்குகின்றார்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகபர் தலைமறைாவகியுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்