குற்றவியல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 7503 வழக்குகள் தாக்கல்

குற்றவியல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 7503 வழக்குகள் தாக்கல்

குற்றவியல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 7503 வழக்குகள் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2019 | 5:31 pm

Colombo (News 1st) வருடத்தின் முதல் 7 மாதங்களில் குற்றவியல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக மாத்திரம் 7503 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தாக்கல் செய்யப்பட்ட 7503 வழக்குகளும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் , 2901 குற்றவியல் வழக்குகள் தொடர்பிலும் 1881 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதவான் நிதிமன்றில் 1646 வழக்குகளைத் தாக்கல் செய்யவும் அந்த வழக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் பொலிஸாருக்கும் விசாரணைப் பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போதுமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத 1075 சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கும் கடந்த 7 மாதங்களில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக கடந்த 2017 ஆம் ஆண்டில் 3102 வழக்குகளும் கடந்த ஆண்டில் 3717 வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மேல் நீதிமன்றத்தில் 4095 வழக்குகள் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்