ஈரானிய வௌிவிவகார அமைச்சர் மீது அமெரிக்கா தடை

ஈரானிய வௌிவிவகார அமைச்சர் மீது அமெரிக்கா தடை

ஈரானிய வௌிவிவகார அமைச்சர் மீது அமெரிக்கா தடை

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2019 | 11:06 am

Colombo (News 1st) ஈரானிய வௌிவிவகார அமைச்சர் மொஹம்மட் ஜவாட் ஸரீஃப் (Mohammad Javad Zarif) மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

ஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி சார்பாக செயற்பட்டமையை கருத்திற்கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க திறைசேரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜவாட் ஸரீஃப் ஈரானின் சிரேஸ்ட தலைவரின் பொறுப்பற்ற நிகழ்ச்சிநிரலை செயல்படுத்துவதாகவும் ஈரானுக்கான உலகளாவிய ரீதியில் முதன்மை செய்தித் தொடர்பாளராக செயற்படுவதாகவும் அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் அறிக்கை ஒன்றினூடாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தம்மை அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விடயம் என, மொஹம்மட் ஜவாட் ஸரீஃப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்