வீரகேசரி பத்திரிகை செய்தி ஆசிரியரின் கட்டுரைக்கு சார்க் நாடுகளின் கட்டுரைப் போட்டியில் முதலிடம்

by Staff Writer 31-07-2019 | 5:56 PM
Colombo (News 1st) "தெற்காசியா பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதால் கிடைக்கும் நன்மைகள்" என்ற தொனிப்பொருளில் வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ரொபர்ட் அன்ரனி எழுதிய விவரணக் கட்டுரை சார்க் நாடுகளின் கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் பிரிவினால் நடத்தப்பட்ட விவரணக் கட்டுரைப் போட்டியிலேயே அவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் துபாயில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கான மாநாட்டில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் அதிமான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். மாநாட்டில் தெற்காசிய பிராந்தியம் பொருளாதார ரீதியில் ஒன்றிணைவதால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதன் பின்னரே விவரணப்போட்டி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வீரகேசரி செய்தியாசிரியர் ரொபர்ட் அன்ரனி, சார்க் பிராந்தியத்தில் வறுமை, வேலைவாய்பின்மை, பதற்றத்தைத் தடுக்க பொருளாதார ரீதியில் கூட்டிணைவது அவசியம் என்ற தலைப்பில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.