திரிபோசா நிறுவனத்திற்கு 2 களஞ்சியசாலைகள்

திரிபோசா நிறுவனத்திற்காக இரண்டு களஞ்சியசாலைகள் அமைக்கத் திட்டம்

by Staff Writer 31-07-2019 | 6:09 PM
Colombo (News 1st) திரிபோசா தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்காக இரண்டு களஞ்சியசாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை திரிபோசா நிறுவனத்திற்கு தற்பொழுது 1,200 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட சிறிய களஞ்சியம் மாத்திரமே காணப்படுகின்றது. இதனடிப்படையில், மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில் தேவையான இடவசதிகளை மேற்கொள்வதற்காக இலங்கை திரிபோசா நிறுவனத்தின் நிதியத்தை பயன்படுத்தி 4000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட 2 களஞ்சியசாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக சுகாதார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.