இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 31-07-2019 | 8:35 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 40 சுகாதார அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இன்று (31) முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது. பாடசாலைகளில் விடுறை வழங்கப்படுவதற்கு முன்னர், அனைத்துப் பாடசாலை வளாகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதனைத் தவிர, க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களில் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.