இந்தியாவின் பிரபல தொழிலதிபர் சடலமாக மீட்பு

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் சித்தார்த்தா சடலமாக மீட்பு

by Staff Writer 31-07-2019 | 10:05 AM
Colombo (News 1st) இந்தியாவின் பிரபல தொழிலதிபர் V.G. சித்தார்த்தா (VG Siddhartha) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். Coffee Day நிறுவனத்தின் நிறுவுனரான சித்தார்த்தாவின் சடலம், மங்களூர் - நேத்ராவதி ஆற்றின் அருகிலிருந்து மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா நேற்று முன்தினம் (29) காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சடலம் சித்தார்த்தாவினுடையது என குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா முழுவதும் கிட்டதட்ட 1750 கிளைகளைக் கொண்ட Coffee Day நிறுவனத்திற்கு மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வரும் போட்டியால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.