முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரிக்கும் ராணா டகுபதி

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரிக்கும் ராணா டகுபதி

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரிக்கும் ராணா டகுபதி

எழுத்தாளர் Bella Dalima

31 Jul, 2019 | 3:39 pm

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ராணா டகுபதி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக 800 விக்கெட்களை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

எம்.எஸ். ஸ்ரீபதி படத்தை இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக தயாரிக்கிறது. தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளார்.

தற்போது படக்குழு படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்