தொடர் ஏவுகணை சோதனையில் வட கொரியா 

தொடர் ஏவுகணை சோதனையில் வட கொரியா 

தொடர் ஏவுகணை சோதனையில் வட கொரியா 

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2019 | 11:53 am

Colombo (News 1st) வட கொரியா, அந்நாட்டின் கிழக்கு கரையோரப்பகுதியில் 2 குறுந்தூர ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.

வொன்சன் பகுதியில் இன்று (31) அதிகாலை இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா கடந்த வாரமும் ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இதேவேளை, குறித்த ஏவுகணைகள் முன்னர் பரிசோதிக்கப்பட்டவற்றிலிருந்து வேறுபட்டவை என, தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங் டூ (Jeong Kyeong Doo) தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை சோதனையால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தத் தாக்கமும் இல்லை என, ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்