by Staff Writer 30-07-2019 | 8:46 PM
Colombo (News 1st) மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடியறியும் ''மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்'' செயற்றிட்டம் நாட்டின் சில பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
நரிப்புல் தோட்டம், ஆயித்திய மலை, உன்னிச்சை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் நியூஸ்ஃபெஸ்ட் - மக்கள் சக்தி குழுவினர் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
மற்றுருமொரு குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிண்ணையடி, முருக்கன் தீவு, குஞ்சன்குளம், தாந்தா மலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்றிருந்தனர்.
பண்டாரவளை, எல்ல, கெப்பட்டிப்பொல, உமா எல, இராவணா எல ஆகிய பகுதிகளுக்கும் மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர்.