வேலையற்ற பட்டதாரிகள் 3800 பேருக்கு அரச சேவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

வேலையற்ற பட்டதாரிகள் 3800 பேருக்கு அரச சேவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2019 | 8:18 pm

Colombo (News 1st) வேலையற்ற பட்டதாரிகள் 3800 பேருக்கு அரச சேவைக்கான நியமனங்கள் அலரி மாளிகையில் இன்று வழங்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 880 வெளிவாரிப் பட்டதாரிகளும் நியமனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுக்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்