வறட்சியால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

வறட்சியால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

வறட்சியால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2019 | 10:41 pm

Colombo (News 1st) நிலவும் வறட்சியான வானிலையால் 6,18,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 1,94,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 40,000 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னச்சாலம்பன் கிராம மக்களும் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வட மேல் மாகாணத்தில் 57,000-இற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் மாவட்டமே அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

மாவட்டத்தில் 34,000-இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7 மாத காலமாக நிலவும் கடும் வறட்சியினால் முந்தல் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முன்னெடுக்கப்பட்ட வேளாண்மை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கால்நடைகளும் மேய்ச்சல் தரை, நீரின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்