நாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்: கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

நாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்: கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

நாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்: கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2019 | 9:19 pm

Colombo (News 1st) தாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவதாகவும் அது நாட்டிற்கே வழங்கப்படும் தீர்வாக அமையும் எனவும் நாமல் ராஜபக்ஸ கிளிநொச்சியில் இன்று தெரிவித்தார்.

முழு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை தாம் வடக்கிற்கு வழங்கவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை நான்கு தடவைகள் பாதுகாத்தது. கடந்த வாரமும் அந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து இன்று வரை எதனையும் முன்னெடுக்க முடியாமற்போயுள்ளது என நாமல் ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்காக கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்