கறுவா ஏற்றுமதியில் அதிக வருமானம்

கறுவா ஏற்றுமதியில் அதிக வருமானம்

கறுவா ஏற்றுமதியில் அதிக வருமானம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2019 | 1:20 pm

Colombo (News 1st) கடந்த வருடத்தில், கறுவா ஏற்றுமதியில் 35,000 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 வீத அதிகரிப்பு என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி. ஹீன்கெந்த குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2018 ஆம் ஆண்டில் 17 500 தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் வருடமொன்றுக்குள் அதிக தொகை கறுவா ஏற்றுமதி செய்தமை இதுவே முதற்தடவை எனவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்