மரமுந்திரிகை இறக்குமதியை இடைநிறுத்தத் தீர்மானம்

மரமுந்திரிகை இறக்குமதியை இடைநிறுத்தத் தீர்மானம்

by Staff Writer 29-07-2019 | 3:30 PM
Colombo (News 1st) மரமுந்திரிகை இறக்குமதியை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மரமுந்திரிகை இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர விநியோகமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுதாபனத்தின் தலைவர் தம்மசிறி பண்டார குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடவை மரமுந்திரிகை அறுவடை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மரமுந்திரிகை இறக்குமதியை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வருடமொன்றுக்கு 20 000 மெற்றிக் தொன் மரமுந்திரிகைக்கான கேள்வி நிலவும் என இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுதாபனத்தின் தலைவர் கூறியுள்ளார். கடந்த வருடங்களில் 10 தொடக்கம் 12 மெற்றிக் தொன் மரமுந்திரிகை மாத்திரமே அறுவடை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தத் தடவை மரமுந்திரிகை அறுவடை இருமடங்காகியுள்ளமையால், வௌிநாட்டிலிருந்து மரமுந்திரிகை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுதாபனத்தின் தலைவர் தம்மசிறி பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.