ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து மற்றொருவர் இராஜினாமா

அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் இராஜினாமா

by Chandrasekaram Chandravadani 29-07-2019 | 5:43 PM
Colombo (News 1st) ​அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் டான் கோட்ஸ் (Dan Coats) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில், கோட்ஸ் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், டான் கோட்ஸுக்குப் பதிலாக தற்போது டெக்ஸாஸ் மாநிலத்தின் காங்கிரஸ் உறுப்பினராகவுள்ள ஜோன் ரட்க்லீபை (John Ratcliffe) பரிந்துரைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து டான் கோட்ஸ் இராஜினாமா செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.