சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2019 | 3:15 pm

Colombo (News 1st) இலங்கைக்கு வருகை தரும் 45 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலவச விசா வழங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இலவச விசா வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்