by Staff Writer 28-07-2019 | 8:15 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளாங்குளம் - சேவா கிராமத்தில் யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
தோட்டப் பயிர்செய்கையை நம்பி வாழும் இந்த மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காயா நகர், பெரியமடு, ஈச்சிலவக்கை பகுதிகளுக்கு சென்ற மக்கள்
சக்தி இல்லங்கள் தோறும் குழுவினருக்கு மக்களின் பல பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிந்தது.
இங்குள்ள மக்கள் நீண்டதூரம் சென்று குடிநீரினைப் பெற்றுக்கொள்வதுடன், காட்டு யானைகளின் அச்சுறுத்தலையும் எதிர்நோக்கியுள்ளனர்.