உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலையில் வழிபாடு

by Staff Writer 28-07-2019 | 8:10 PM
Colombo (News 1st) உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மக்கள் அமைப்பினர் இன்று திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பான பேரணி, திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலை சென்றடைந்தது. திருகோணமலை நகர மத்தியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, SOFA உடன்படிக்கை தொடர்பில் இவர்கள் மக்களை தௌிவுபடுத்தினர்.