ஸ்ரீலங்கா க்ளோரியால் பாதிப்பு: வழக்குத் தொடரவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

ஸ்ரீலங்கா க்ளோரியால் பாதிப்பு: வழக்குத் தொடரவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

ஸ்ரீலங்கா க்ளோரியால் பாதிப்பு: வழக்குத் தொடரவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2019 | 4:09 pm

Colombo (News 1st) கடும் காற்றுடன் கூடிய வானிலையால் காலி – ரூமஸ்ஸல கடற்பகுதியில் ஸ்ரீலங்கா க்ளோரி என்ற கப்பல் விபத்திற்குள்ளானதால் பொனவிஸ்டா பவளப்பாறை அடங்கிய சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் வழக்குத் தொடரவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கப்பலை அங்கிருந்து அகற்றும் போது சமுத்திர சூழல் மேலும் பாதிக்கப்படக்கூடும் என அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டெர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.

மேலும், சரக்குக் கப்பலிலுள்ள எரிபொருளை இறக்குவதற்கான நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டெர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி மாலை வீசிய பலத்த காற்றுடன் கூடிய காலநிலையால் குறித்த சரக்கு கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்த இடத்திலிருந்து விலகி, அதிலிருந்த கடற்படையினருடன் ரூமஸ்வல கடற்பரப்பிற்கு அடித்துச்செல்லப்பட்டிருந்தது.

அத்துடன், கப்பலில் சுமார் 15 தொன் டீசல் காணப்பட்டதுடன், அது கசியத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்