ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2019 | 3:26 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

16 தொகுதிகளுக்கே புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (27) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் – குளியாப்பிட்டிய தொகுதியின் புதிய அமைப்பாளராக தர்மசிறி தசநாயக்கவும் பிங்கிரிய தொகுதி அமைப்பாளராக அத்துல விஜசிங்கவும் குருநாகல் மாவட்ட அமைப்பாளராக சம்பத் சுசந்த கெடவலகெதரவும் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

புத்தளம் மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி ஷாந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை தொகுதியின் அமைப்பாளராக ஸ்ரியாணி விஜேவிக்ரமவும் கல்முனை தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி யூ.எம்.நிசாரும் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக ஏ.ம்.அப்துல் மஜீட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தவிர, கொழும்பு கிழக்கு, சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர்களும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்