கொஹூவலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொஹூவலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொஹூவலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2019 | 3:33 pm

Colombo (News 1st) கொஹூவல பகுதியில் ஜீப்பில் சென்ற இருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஹூவல – ஜம்முகஸ்முல்ல பகுதியில் இன்று அதிகாலை 1.10 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

ஜீப்பில் சென்ற இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

38 வயதுடைய உடஹமுல்ல பகுதியைச் சேர்ந்த ஜீப் வண்டி சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ​ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்