எனக்கு சுப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: தனுஷ்

எனக்கு சுப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: தனுஷ்

எனக்கு சுப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: தனுஷ்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2019 | 4:26 pm

நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வழங்கிய சுப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என தனுஷ் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனுஷுக்கு இளைய சுப்பர் ஸ்டார் பட்டம் அளிப்பதாகக் கூறினார்.

இதற்கு தனுஷ் பதிலளிக்கும்போது,

தாணு என் மீதான அன்பு மிகுதியால் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம். தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும். என் ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை. யார் பகை காட்டினாலும் பொறுமையாக செல்லுங்கள். பதிலுக்கு பகையைக் காட்டாதீர்கள். விரைவில் அனைத்து ரசிகர்களையும் சந்திக்கிறேன்

என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்