கொழும்பு பல்கலையின் பீடம் ஒன்று மூடப்பட்டுள்ளது

கொழும்பு பல்கலையின் பீடம் ஒன்று உடனடியாக மூடப்பட்டுள்ளது

by Staff Writer 27-07-2019 | 8:09 PM

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது

ஆண்கள் விடுதியில் ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் மீள் அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார். விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் இன்று அங்கிருந்து வௌியேற வேண்டும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.