இந்தியர்களை விடுவிக்குமாறு ஈரானிடம் கோரிக்கை

இந்தியர்களை விடுவிக்குமாறு ஈரானிடம் கோரிக்கை

by Staff Writer 27-07-2019 | 8:11 PM

தமது நாட்டவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு ஈரானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

பனாமா கொடியுடனான எண்ணெய் தாங்கி கப்பலை சமீபத்தில் கைப்பற்றிய ஈரான் கப்பலில் இருந்த இந்தியர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 12 பேரில் 9 பேரை ஈரான் விடுதலை செய்துள்ளதுடன் மேலும் மூவரையும் விடுவிக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.