16 வருடங்களின் பின்னர் மரண தண்டனை

16 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: அமெரிக்க அரசின் அறிவிப்பு தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம்

by Bella Dalima 26-07-2019 | 4:37 PM
மரண தண்டனையை 16 வருடங்களின் பின்னர் ஐவருக்கு நிறைவேற்றவுள்ளதாக அமெரிக்க நீதி திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் பணியகத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க சட்ட மா அதிபர் William Barr தெரிவித்துள்ளார். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கொலை, பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கே தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அமெரிக்க சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மரண தண்டனை தொடர்பிலான அமெரிக்க மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.