மன்னாரில் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 26-07-2019 | 8:02 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் இன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னையன் குடியிருப்பிற்கு ''மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்'' குழுவினர் சென்றிருந்தனர். வீதி கட்டமைப்பு உரிய முறையில் இன்மையால் பஸ் போக்குவரத்து இல்லை எனவும், இதன் காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட - ஓலைத்தொடுவாய், வளன் நகர் பகுதியிலும் வீதி கட்டமைப்பு உரிய முறையில் காணப்படவில்லை. அத்துடன், தமக்கு வாழ்வாதார உதவிகளும் சமுர்த்தியும் உரிய முறையில் வழங்கப்படவில்லை என மக்கள் முறையிட்டுள்ளனர். இதேவேளை, மக்கள் சக்தி குழுவினரில் ஒரு பகுதியினர் நுவரெலியாவிற்கும் மற்றைய குழுவினர் பொலன்னறுவைக்கும் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.