புத்தளத்தில் கால்வாயிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

புத்தளத்தில் கால்வாயிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 26-07-2019 | 3:34 PM
Colombo (News 1st) புத்தளம் நகரிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புத்தளம் நகர சபையில் கடமையாற்றும் சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய அவை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 180 துப்பாக்கி ரவைகளில் T56 ரக ரவைகளும் விமான அழிப்பு ரவைகள் மூன்றும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த கால்வாயிலிருந்து துப்பாக்கி​யொன்றுடன் வாளொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.