ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

by Staff Writer 26-07-2019 | 6:57 PM
Colombo (News 1st) ஜப்பானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் Kenji Harada-உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமுத்திர பாதுகாப்பு, சர்வதேச கடல் மார்க்க பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இருநாட்டு கடற்படையினருக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பு துறைமுகநகர் அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு உடன்படிகை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை விஸ்தரிப்பது முக்கியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் ஆகியன கடந்த மூன்று வருடங்களில் சடுதியாக அதிகரித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் Kenji Harada தெரிவித்துள்ளார்.