பாதசாரிக் கடவையில் விபத்து: பஸ்ஸில் மோதுண்டு தூக்கியெறியப்பட்ட மாணவி

பாதசாரிக் கடவையில் விபத்து: பஸ்ஸில் மோதுண்டு தூக்கியெறியப்பட்ட மாணவி

பாதசாரிக் கடவையில் விபத்து: பஸ்ஸில் மோதுண்டு தூக்கியெறியப்பட்ட மாணவி

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2019 | 9:16 pm

Colombo (News 1st) வௌ்ளை பாதசாரிக் கடவை ஊடாக பாதுகாப்பாக வீதியைக் கடப்பதற்கு முற்பட்ட மாணவி, சாரதியின் பொறுப்பற்ற செயற்பாட்டால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வரக்காப்பொலயில் இடம்பெற்றுள்ளது.

வரக்காப்பொல – மங்கெதர சந்தியில் வௌ்ளைக் கடவைக்கருகில் பலத்த காயமடைந்தவர் மேலதிக வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவியாவார்.

பாத்திமா மினாஸா எனும் இவர் கடந்த 20 ஆம் திகதி மாலை 4.30 அளவில் இத்துயர விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

அருகில் பயணிக்கும் எவரையும் கவனிக்காது 2 தனியார் பஸ்கள் பந்தயத்தில் ஈடுபட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை தௌிவாகின்றது.

மேலும், பாதசாரிக் கடவை போடப்பட்டுள்ள பகுதி வளைவுப் பகுதியாக இருப்பதால், பாதசாரிகள் விபத்தை எதிர்கொள்ள ஏதுவாக உள்ளது.

விபத்தை எதிர்கொண்ட மாணவி எதையும் சிந்திப்பதற்கு முன்னரே பஸ்ஸில் மோதுண்டு வீசப்பட்ட நிலையில், பஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பாத்திமா மினாஸா கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் உயர் கல்வி பயின்று வருகின்றார்.

தப்பிச்சென்ற பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காப்பொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்