by Staff Writer 26-07-2019 | 3:48 PM
Colombo (News 1st) அரச காணி விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் மாகாண சபைகளுடன் தொடர்புடையது என்பதால் அதனை ஒழுங்கு பத்திரத்திற்குள் சேர்ப்பதற்கு முன்னர் மாகாண சபைகளின் அனுமதியை பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
காணி விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் கோரப்பட்ட பொருட்கோடலுக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதனை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து மேலதிக சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.