புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 25-07-2019 | 6:03 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானிய சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ‘டெலிகிராப்’ பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. 02. சம்மாந்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கிய ஒருவருக்கு ஜனாதிபதியால் 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 03. தவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 04. மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பிலான வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிப்பது தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் 9ஆம் திகதி பிறப்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 05. ஐ.நா. விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை நீதிபதிகளை சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டுள்ளது. 06. அரச நிறுவனங்களில், 16 800 பட்டதாரிகளைப் பயிலுனர் பட்டதாரிகளாகப் பயிற்சியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 07. பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து T56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமற்போனமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 08. களனி ரயில் நிலைய வீதி பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுத்துச் சென்ற மருந்து உற்பத்தி நிலையத்திலிருந்து விநியோகிக்கப்பட்ட சில மருந்துகள் நாட்டின் 12 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக, தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது. 09. நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக நாட்டிலுள்ள 33 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க எல்லைக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை மட்டுப்படுத்தும் வகையிலான நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலஸ் (Jimmy Morales) மேன்முறையீடு செய்துள்ளார். 02. கர்நாடக சட்ட மன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்