பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை நியமனம்

பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை நியமனம்

by Staff Writer 25-07-2019 | 11:08 AM
Colombo (News 1st) பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளது. 31 பேரைக் கொண்ட அமைச்சரவையில் டொமினிக் ராப் (Dominic Raab) வௌியுறவுத்துறை செயலாளராகவும் ப்ரிடி படேல் (Priti Patel) உள்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவையில் இருந்த சாஜிட் ஜாவிட் (Sajid Javid) சான்சலராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரிவல் ஜெரமி ஹண்ட் (Rival Jeremy Hunt) பதவிநீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, பிரக்ஸிட் நடவடிக்கைக்கான குழுவையும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நியமித்துள்ளார். இதன்படி, ஸ்டீபன் பார்க்லே (Stephen Barclay) பிரக்ஸிட் செயலாளராகவும் மைக்கல் கோவ் (Michael Gove) சான்சலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.