சுற்றுலாப் பயணிகளுக்கான சுதந்திர விசா மீண்டும்

சுற்றுலாப் பயணிகளுக்கான சுதந்திர விசா விநியோகம் மீள ஆரம்பம்

by Staff Writer 25-07-2019 | 9:18 AM
Colombo (News 1st) இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சுதந்திர விசா விநியோக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன. தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கான On Arrival Visas எனப்படும் சுற்றுலா விசா அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதுகாப்பு நிலைமையைக் கவனத்தில் கொண்டு சுதந்திர அடிப்படையில் விசா வழங்குவதை அமைச்சரவையினால் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் நோக்கில் மேற்கத்தேய நாடுகள் உள்ளிட்ட டென்மார்க், சுவிட்ஸர்லாந்து, நோர்வே, பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு சுதந்திர சுற்றுலா விசா அனுமதிப் பத்திரத்தை வழங்கும் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.