சுப்பர் ஹீரோவாக நடிக்கும் ராகவா லோரன்ஸ்

சுப்பர் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்

by Chandrasekaram Chandravadani 25-07-2019 | 3:17 PM
நடிகர் ராகவா லாரன்ஸ் சுப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் முப்பரிமாண தோற்றத்தில் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸின் நடிப்பில் அண்மையில் வௌியாகிய காஞ்சனா 3 படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காஞ்சனா படத்தை 'லக்ஸ்மி போம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றார். லக்ஸ்மி போம் படத்தில் ஹீரோவாக அக்‌ஷய் குமார் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் இயக்கி நடிக்கவுள்ள 3D தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ள படத்தில், ராகவா லாரன்ஸ் சுப்பர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான மற்றைய நடிகர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.