by Staff Writer 25-07-2019 | 4:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் குளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊரெழு கர்ப்பவர்தினி அம்மன் கோவிலின் ஆலய மணிக்கோபுரத்தில் காணப்பட்ட கருங்குளவிக்கூடு கலைந்துள்ளது.
இதன்போது, இன்று பிற்பகல் 2.30 அளவில் குளவிக்கொட்டிற்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
ஊரெழு பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும், 25 பேர் குளவிக்கொட்டிற்கு இலக்காகியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.