by Staff Writer 25-07-2019 | 4:32 PM
Colombo (News 1st) அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை மாத சம்பளத்தில் இந்த அதிகரிப்பு உள்வாங்கப்பட்டுள்ளது.
இதற்கென 2700 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு என்பவற்றுக்கு 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.