முரளிதரனாக நடிப்பது மிகவும் சவாலாக இருக்கும்: விஜய் சேதுபதி

முரளிதரனாக நடிப்பது மிகவும் சவாலாக இருக்கும்: விஜய் சேதுபதி

முரளிதரனாக நடிப்பது மிகவும் சவாலாக இருக்கும்: விஜய் சேதுபதி

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2019 | 3:45 pm

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய் சேதுபதி பின்வருமாறு தெரிவித்துள்ளார்

தமிழ் இனத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் முரளிதரன். உலகம் முழுக்க தன் முத்திரையைப் பதித்துள்ளார். முரளிதரனாக நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருக்கும். ஆனால், அந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்தப் படத்தில் ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளார் முரளிதரன். கிரிக்கெட் தொடர்பான விபரங்களில் எனக்கு ஆலோசனைகள் சொல்லவுள்ளார்.

இதேவேளை, விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகர் தன் வேடத்தில் நடிப்பதை கெளரவமாகக் கருதுவதாகவும் படப்பிடிப்பு முடியும் வரை படத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கவுள்ளார்.

இந்தப் படம் அடுத்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்